தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது – வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்… !!

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப் பேற்றுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில் தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.

முதல்-அமைச்சர் விஜய் – யின் உத்தரவுபடி தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான நிதித்துறை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் நிதி நிலை குறித்த  வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.

வெள்ளை அறிக்கை

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையில் உள்ள விவரம்:-

* தமிழகத்தின் உண்மையான மொத்த கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ளது.

* ரூ. 13.18 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் மொத்த கடனளவில் ரூ. 10 லட்சம் கோடி நேரடி கடனாகும். எஞ்சிய ரூ. 3.18 லட்சம் கோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் தொகையாகும்.

* 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி

* கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

* 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடனை (ரூ. 5 லட்சம் கோடி) விட கடந்த திமுக ஆட்சியில் மட்டும் அதிக கடன் (ரூ. 5 லட்சம் கோடி) வாங்கியுள்ளது.

* தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன் உள்ளது.

* தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 சதவீதமாக மோசமடைந்துள்ளது.

* தமிழத்தில் 2021ம் ஆண்டு ரூ. 46 ஆயிரத்து 538 கோடியாக இருந்த வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

* மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது.

* மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச்செலவீனம் குறைந்துள்ளது.

* வருவாய்ப்பற்றாக்குறை 2026ம் ஆண்டு ரூ. 78 ஆயிரத்து 324 கோடியாக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தின் மொத்த வருவாய் வரவில் வட்டி செலவீனம் 22.8 சதவீதமாகும்.

* தமிழகத்தில் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதமாக உள்ளது.

* கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் அளவு 14.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

* கடந்த திமுக ஆட்சியில் முதலீடுகளுக்கு மட்டுமல்லாமல் அன்றாட செலவுகளுக்கே கடன் பெறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

* தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் பற்றாக்குறை 2.2 சதவீதமாக உள்ளது. குஜராத், மராட்டியம், கர்நாடகாவை விட தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக குறைவாகும்.

* தமிழக அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ. 67 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது

* தமிழக அரசின் ஒவ்வொரு 1 ரூபாய் மூலதனச் செலவிற்கும் 2.26 ரூபாய் புதிய கடன் பெறப்படுகிறது.

* தமிழக போக்குவரத்து துறை ரூ. 72 ஆயிரத்து 667 கோடி கடனில் உள்ளது.

* தமிழகத்தின் மின்சாரத்துறைக்குதான் அதிக கடன் அளவு உள்ளது. மின்சாரத்துறைக்கு மட்டும் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி கடன் உள்ளது.

தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை முழு விவரம்:-

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *