மேஷம்
நிதி நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
ரிஷபம்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.
மிதுனம்
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நண்பர்கள் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு.
கடகம்
மகிழ்ச்சி கூடும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நாட்டுப்பற்று மிக்க ஒருவரால் வீட்டுப் பிரச்சனை தீரும்.
சிம்மம்
யோகமான நாள். தொழில் வளர்ச்சி காண்பீர்கள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு. சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
கன்னி
விவகாரங்கள் விலகும் நாள். செய்தொழிலில் லாபம் உண்டு. நீண்ட நாளையப் பகையொன்று நட்பாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
விருச்சிகம்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். சுபவிரயமுண்டு. மதியத்திற்கு மேல் நினைத்தது நிறைவேறும். பயணங்களால் பலன் உண்டு.
தனுசு
தொழில் போட்டிகள் அதிகரிக்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் ஏற்படும்.
மகரம்
விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.
கும்பம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.
மீனம்
கலகலப்பான தகவல் வந்து சேரும் நாள். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.