12 ராசிக்காரர்களுக்கு திருமண தடை நீக்கும் பரிகாரங்கள்!!

திருமணம், குழந்தை பேறு இல்லாத வாழ்க்கை முழுமை பெறாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் சிலருக்கும் பல விதமான காரணங்கள் திருமண தள்ளி கொண்டே இருக்கும்.

இதனால் அவர்கள் பலவிதமான மன வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். பார்க்க கூடியவர்கள் அனைவரும் ஏன் இன்னும் வரன் அமையவில்லையா என்று கேட்டு மனதை புண்படுத்துவார்கள். இன்னும் சிலர் ஜாதகத்தை பார்ப்பார்கள்.

ஒவ்வொரு ஜாதக காரரை பார்த்து இதற்கு ஏதும் பரிகாரம் செய்யலாமா அல்லது ஏதும் கோவிலுக்கு செல்லலாமா என்று கேட்பார்கள்.இதற்கு பதிலாக வீட்டிலேயே ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் திருமண வரன் கிடைக்கும். அவை என்ன மந்திரம் என்று இந்த பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான பரிகாரத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

மேஷம், விருச்சிகம்

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ‘ஓம் சும் சுக்ராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

ரிஷபம், துலாம்

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ‘ஓம் அங் அங்காரகாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

மிதுனம், கன்னி

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் ‘ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வர திருமண தடை நீங்கும்.

கடகம், சிம்மம்

கடகம், சிம்மம் ராசிக்காரர்கள் தினமும் அல்லது சனிக்கிழமைகளில் ‘ஓம் சம் சனைச்சராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வரவும்.

தனுசு, மீனம்

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் திருமண தடை நீங்க தினமும் அல்லது புதன்கிழமைகளில் ‘ஓம் பும் புதாய நமஹ’ என்று 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

மகரம்

தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் ‘ஓம் சோம் சோமாய நமஹ’ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

கும்பம்

தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் ‘ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ’ என்று 108 முறை ஜெபித்து வரவும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *