கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற விழா​வில் இந்தியக் கடற்படைக்​காக 3 போர்க்​கப்​பல்​களை நாட்​டுக்கு அர்ப்​பணித்த​ பிரதமர் மோடி !!

கொல்கத்தா:
கொல்​கத்​தா​வில் நேற்று நடை​பெற்ற விழா​வில் இந்தியக் கடற்படைக்​காக 3 போர்க்​கப்​பல்​களை பிரதமர் மோடி நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

மத்​திய அரசின், ‘சுய​சார்பு இந்​தி​யா’ திட்​டத்​தின் கீழ், இந்​தி​யக் கடற்​படைக்​காக ஐஎன்​எஸ் துனகிரி, ஐஎன்​எஸ் அக்​ராய், ஐஎன்​எஸ் சன்​ஷோதக் ஆகிய போர்க்​கப்​பல்​களை கொல்​கத்​தாவைச் சேர்ந்த பொதுத்​துறை நிறு​வன​மான கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினீயர்ஸ் நிறு​வனம் உரு​வாக்​கியது.

இவற்​றில் ஐஎன்​எஸ் துனகிரி போர்க் கப்​பல் எதிரி நாடு​களின் ரேடார்​களில் சிக்​காது. இவற்​றில் பிரம்​மோஸ் உட்பட பலவகை ஏவு​கணை​களை ஏவ முடி​யும்.

கடலின் ஆழத்தை அளவிடும் ஐஎன்​எஸ் அக்​ராய் ஆழ மற்ற கடற்​பகு​தி​யில் பயணிக்​கும் நீர்​மூழ்கி எதிர்ப்​புப் போர்க்​கப்​பல். ஐஎன்​எஸ் சன்​ஷோதக் கடலின் ஆழத்தை அளவிடும் பணியை மேற்​கொள்​ளும் போர்க்​கப்​பல்.

இந்த கப்​பல்​களை மேற்கு வங்​கம் கொல்​கத்​தா​வில் உள்ள சியாமா பிர​சாத் முகர்ஜி துறை​முகத்​தில் பிரதமர் மோடி நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் மேற்​கு​வங்க ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் சுவேந்து அதி​காரி, கடற்​படைத் தளபதி அட்​மிரல் கிருஷ்ண சுவாமி​நாதன் உட்பட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *