இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் தனது சக வீரர்களுடன் கேப்டன் டோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்சின் பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சிஎஸ்கே அணி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.