மேகேதாட்டு திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது – அமைச்சர் ஆனந்த் விளக்கம்!!

சென்னை:
“மேகேதாட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நகர்வுகளை முடக்குவதற்கும், காவிரி உபரி நீர் மீது தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் ஒரு தலைசிறந்த அணுகுமுறையாக புதிய நடுவர் மன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது” என அமைச்சர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது குறித்த அரசின் முன்மொழிவுக்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவி த்துள்ளன.

இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் படியே புதிய நடுவர் மன்ற கோரிக்கை தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தனது உத்தியை மாற்றியுள்ளது. திட்ட அறிக்கை கொடுக்கச் சொல்லி கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்தால் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை அமைய வழிவகுத்து விடும்.

இதன் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்.

கர்நாடகம் தனது உத்தியை மாற்றியுள்ளது. அதனால் நாமும் புதிய நடுவர் மன்றம் அமைக்க தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று கூறினார்.

இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் மேகேதாட்டு விவகாரம் குறித்து விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர் என்.ஆனந்த், “மேகேதாட்டு விவகாரத்தில் கடந்த மே 25 ஆம் தேதி அரசு தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயரதிகாரி களுடன் முதல்வர் விஜய் மேல் நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.

அதன் பின்னர் முதல்வர் மே 26-ல் பிரதமருக்கு கடிதம் வாயிலாகவும், மே 27-ல் பிரதமரை நேரில் சந்தித்தும் மேகேதாட்டு திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

முதல்வரின் உத்தரவின் படி, புது டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தமிழக அரசின் சார்பாக மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்து மே 27-ல் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், ஜூன் 18 அன்று அமைச்சர்கள், சட்ட வல்லுநர் களிடம் ஆலோசித்து மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தீர்மானத் தை முன்மொழியவும், அதற்கு உறுப்பினர்களின் ஆதரவைக் கோரவும் முடிவெடுத்தார்கள்.

இந்த தீர்மானத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த மார்ச் 4 ஆம் தேதி தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு மேகே தாட்டு விவகாரத்தில் ஒரு புதிய நடுவர் மன்றம் அமைக்க முன் மொழிவு அனுப்பியதை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதன்படி ஜூன் 19-ல் நடுவர் மன்றம் அமைக்குமாறு வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை அன்றே தனது நேர்முக கடிதம் வாயிலாக பிரதமருக்கு முதல்வர் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு மேகேதாட்டு திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடி க்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது.

ஆனால், நடுவர் அமைக்குமாறு கோருவது சரியான அணுகுமுறை இல்லை என சிலர் கருதுகின்றனர்.

சில தரப்பினர் பரப்பும் தவறான புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசின் நேர்த்தியான அணுகுமுறை குறித்து அவையில் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

கடந்த நவம்பர் 13 அன்று மேகேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக நாம் தொடர்ந்த வழக்கை, இத்திட்டம் ஆரம்ப நிலையில் தான் உள்ளது எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த தீர்ப்பின் பேரால் மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிட்டது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கர்நாடகா மற்றும் கேரளா தன்னிச்சையாக அனுமதிக்கப்படாத திட்டங்களை கையில் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

கடந்த டிசம்பர் 25-ல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக காவிரி நீர்வளத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

மேலும், கடந்த மே மாதம் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சக கடிதம் மூலம், மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்ட அறிக்கை டிபிஆர் மீது தனது தொழில்நுட்ப கருத்துக்களை வழங்கி அடுத்த கட்ட நகர்வுக்கு காத்திருப்பது அம்பலமாகியுள்ளது.

எனினும், இந்த வழிகாட்டுதல்களை கடுமையாக எதிர்த்து தமிழக அரசு ஜூன் 9 அன்று கடிதம் எழுதியுள்ளது.

இந்தச் சூழலை கருத்தில் கொண்டு மே 27-ல் பிரதமரை சந்தித்த போது மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான கவலைகளை குறிப்பிட்டு முதல்வர் கடிதம் அளித்துள்ளார்.

2018-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்துக்கு உறுதி செய்யப்பட்ட நீர் பங்கீட்டை எந்த ஒரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது.

எனவே தமிழகத்துக்கு கர்நாடகா அளிக்க வேண்டிய 177. 25 டிஎம்சி யில் எந்த மாற்றமும் ஏற்படாது. 1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்பிரிவு 4, 1-ன் படி ஏற்கெனவே தீர்க்கப்பட்ட பிரச்சினையை மீண்டும் திறக்க சட்டத்தில் இடமில்லை.

2018-ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் உபரி நீர் குறித்து துல்லியமாக கணக்கிடப்படவில்லை, எனவே இதுபற்றி கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு அசல் வழக்கை தொடர்ந்தது. 1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டப்படி, இத்தகைய புதிய நதி நீர் பிரச்சினையை தீர்க்க புதிய நடுவர் மன்றத்தால் மட்டுமே முடியும் என்பது உச்ச நீதிமன்றத்தில் நமது வாதம் ஆகும்.

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்து விட்டது எனக் கூறுவது முற்றிலும் தவறானது.

காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவின் திட்ட அறிக்கை யை நிராகரிக்க வில்லை. மாறாக எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வள ஆணையத்திடமே திருப்பி அனுப்பியுள்ளது. எனவே, ஆபத்து இன்னும் நீங்கவில்லை.

ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் புதிய வழிகாட்டுதலின் கீழ் மறைமுகமாக மேகேதாட்டு திட்டத்தை மேற்கொள்ள முற்படும் வேளையில் நாம் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது.

அந்த வகையில் ஒன்றிய அரசின் தன்னிச்சையான நகர்வுகளை முடக்குவதற்கும், உபரி நீர் மீது தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும் ஒரு தலைசிறந்த அணுகுமுறையாக புதிய நடுவர் மன்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப் பும் ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *