இனிமேல் மாநிலத் தலை​வர் பதவி​யில் தொடர வேண்​டாம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!!

சென்னை:
“இனிமேல் மாநிலத் தலை​வர் பதவி​யில் தொடர வேண்​டாம் என என்​னுடைய உள்​மனது சொல்​கிறது” என, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்வப்பெருந்தகை தெரி​வித்​துள்​ளார்.

பெங்​களூரூ​வில் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் கார்​கேவை சந்​தித்​து​விட்டு வந்த செல்​வப்​பெருந்​தகை சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தேர்​தல் முடிந்​தவுடன் நான் மாநிலத் தலை​வ​ராகத் தொடர்​வதற்கு வாய்ப்​பில்​லை.

ஆகை​யால், வேறு ஒரு​வர் அந்​தப் பணியை மேற்​கொள்​வார் என, தேர்​தலுக்கு முன்பு நான் தெரி​வித்​திருந்​தேன்.

இதை செய்​தி​யாளர்​களிடம் மட்​டுமில்​லை, எங்​கள் கட்​சித் தலை​மைக்​கும் நான் சொல்​லி​யிருக்​கிறேன். அந்த அடிப்​படை​யில் கார்​கேவை சந்​தித்​த​போது அந்த வாத​மும் பேசப்​பட்​டது.

அதற்கு கார்​கே, ‘சிறிது பொறுமை​யாக இருங்​கள். நான் கூப்​பிடு​கிறேன்’ என்று கூறி​யிருக்​கிறார்.

தேர்​தல் முடிவு​கள் எப்​படி வரும் என தெரி​யாத​போதும், மாநிலத் தலை​வர் பதவி​யில் தொடர மாட்​டேன் எனத் தெரி​வித்​திருந்​தேன்.

தேர்​தலுக்கு முன்பே சில கசப்​புணர்​வு​கள் ஏற்​பட்​டதே இதற்கு காரணம். சில நண்​பர்​கள் புரிதல் இல்​லாமல் பேசி​னார்​கள்.

எனவே, என்​னுடைய உள்​மனது ‘இனிமேல் மாநிலத் தலை​வர் பதவி​யில் தொடர வேண்​டாம்’ என சொன்​னது. எனவே தலைமை என்​னுடைய கோரிக்​கையை பரிசீலனை செய்து என்னை விடுவிக்​கும் என்று நான் நம்​பு​கிறேன்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *