சென்னை:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் ஜூலை தமிழகம் வருகிறார். அப்போது அவர் புதுச்சேரிக்கும் வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி காவல்துறைக்கு ‘ஜனாதிபதியின் வண்ண விருது’ வழங்கப்படுவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் அறிவித்தார்.
ஜனாதிபதியின் வண்ண விருது ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய உள்துறை மந்திரி ஆகியோரால் மட்டுமே வழங்கப்படும்.
புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதியின் வண்ண விருது’ வழங்கும் விழா அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்கு பின் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விருதை வழங்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி காவல்துறை தொடங்கியுள்ளது.
இதையொட்டி புதுவை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வினய் குமார் கட்டு, போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் ஆகியோர் தலைமையில் அடையாள அணிவகுப்பு ஒத்திகை நடந்து வருகிறது.
புதுவைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.