கவர்னர் அர்லேகருடன் சபாநாயகர் திடீர் சந்திப்பு…

சென்னை:
கிண்டி லோக் பவனில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று காலை யில் சென்று கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரும் உடன் சென்றிருந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கவர்னரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னர் உரைக்கு முறைப்படி நன்றி தெரிவிக்கவும், த.வெ.க. அரசின் மீதான குதிரை பேரம் புகார் குறித்து விளக்கம் அளிக்கவும் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோருக்கு எதிராக கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றது தொடர்பாக எழுந்த புகாருக்கும் சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தெரிகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *