இன்றைய பஞ்சாங்கம்….

பராபவ ஆண்டு, ஆனி-17 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : பிரதமை காலை 8.01 வரை பிறகு துவிதியை

நட்சத்திரம் : பூராடம் காலை 7.37 வரை பிறகு உத்திராடம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி பவனி வரும் காட்சி. அஹோபிலமடம் 13-ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் திரு நட்சத்திர வைபவம். திருத்தங்கல் ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் கண்ணாடி சப்பரத்தில் சூர்ணோற்சவம், மஞ்சள் நீராட்டு விழா.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு.

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் – மகிழ்ச்சி

ரிஷபம் – லாபம்

மிதுனம் – முயற்சி

கடகம் – உயர்வு

சிம்மம் – நன்மை

கன்னி – வரவு

துலாம் – செலவு

விருச்சிகம் – வெற்றி

தனுசு – சுகம்

மகரம் – ஜெயம்

கும்பம் – நற்செய்தி

மீனம் – பாராட்டு

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *