மான்செஸ்டர்:
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த 1-ம் தேதி நடைபெற்ற இவ்விரு அணிகளிடையிலான முதலாவது டி20 போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில் 2-வது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள்குவித்தது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், அபிஷேக் சர்மா ஆகியோர் அரை சதம் விளாசினர். எனவே, இன்றைய ஆட்டத்திலும் அவர்களிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.
அதேநேரத்தில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார்.
அதேபோன்று திலக் வர்மாவும் தடுமாறி வருகிறார். அணியில் இடத்தை தக்கவைக்க வேண்டுமென்றால் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.