இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என்று தான் நான் சொல்வேன் – பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தினேஷ் கனேரியா !!

ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீசில் முடிவடைந்த நிலையில், ஐசிசி சாம்பியின்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

பாதுகாப்பு காரணம், அரசியல் விவகாரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால் பிசிசிஐ இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. “hybrid model” என அழைக்கப்படும் வேறுநாட்டில் போட்டி நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தியா மோதும் போட்டிகளில் அனைத்தும் நடத்தப்படலாம்.

ஆனால் இந்திய அணி பாகிஸ்தானிற்கு வந்து விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர்கள், வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது, பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தினேஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தினேஷ் கனேரியா கூறுகையில் “பாகிஸ்தான் சூழ்நிலையை பார்க்கும்போது, இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். பாகிஸ்தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும்.

ஐசிசி இது தொடர்பாக முடிவு எடுக்கும். பெரும்பாலும் இது “hybrid model” தொடர்பானதாக இருக்கும். துபாயில் போட்டிகள் நடத்தப்படும்.

வீரர்களின் பாதுகாப்புக்குத்தான் முதல் முன்னுரிமை. மரியாதை என்பதுதான் 2-வது முன்னுரிமைதான். ஏராளமான விசயங்கள் உள்ளன.

பிசிசிஐ தனது சிறந்த வேலையை செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இறுதி முடிவை அனைத்து நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன். இது “hybrid model” தொடராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல் கூறுகையில் “இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.

நாம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் விளையாடி, நேசிக்க வேண்டும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *