சென்னை:
பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். அவரது முதல் படத்தின் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கும் படம் தாமதமாகிறது. அதற்கு முன்னதாக புதிய படமொன்றை தயாரித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் படக்குழுவினர் அதிகாரபூவமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த 6 பேர் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.
ஆகையால் ஒரே பெயராக ‘THE ALPHA UNIT’ என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இதன் கதையினை பிரதீப் ரங்கநாதனே எழுதியிருக்கிறார்.
இப்படத்தில் மமிதா பைஜு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி, ஸ்வாசிகா, அனாமிகா மஹி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
’Aane Wala Star’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக தினேஷ் புருஷோத்தமன், இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிரதீப் இ ராகவ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு PR SHOW என்று பெயரிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.