கோவையில்  கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் 2-வது புதிய கிளை பிரம்மாண்ட தொடக்கம் …. நடிகர் பிரபு, நடிகை மாளவிகா மோகனன் திறந்து வைத்தனர்…

கோவை ;

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் நம்பகமான நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ், கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் தனது பிரம்மாண்டமான இரண்டாவது புதிய விற்பனை நிலையத்தை இன்று  (12/7/26 )தொடங்கியுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த நகை வாங்கும் அனுபவத்தை மிக அருகில் கொண்டு சேர்க்கும் நோக்கில் இக்கிளை அமைக்கப்பட்டுள்ளது. ஆம், கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம், ஆர்.எஸ்.புரத்தில் தனது புதிய கிளையை இன்று (12/7/26) காலை 11 மணியளவில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.

இந்தப் புதிய விற்பனை நிலையத்தைப் பிரபல திரைப்பட நட்சத்திரம் ‘இளைய திலகம்’ திரு. பிரபு கணேசன் மற்றும் பிரபல நடிகை செல்வி. மாளவிகா மோகனன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி முறைப்படி திறந்து வைத்தனர். தங்களைக் கவர்ந்த நட்சத்திரங்களைக் காணப் பொதுமக்களும், ரசிகர்களும் கடை வளாகத்தில் பெருமளவில் திரண்டிருந்தனர். பாரம்பரிய கைவினைத் திறனையும், சமகால நவீன வடிவமைப்புகளையும் தன்னுள் ஒருங்கிணைத்து தங்கம், வைரம் மற்றும் நவரத்தின ஆபரணங்களின் ஏராளமான வடிவமைப்புகள் இப்புதிய கிளையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இதுகுறித்து கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரமேஷ் கல்யாணராமன் அவர்கள் பேசுகையில்;

 தமிழ்நாடு எப்போதும் தங்களது மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக விளங்கி வருவதாகவும், இந்த புதிய கிளை இப்பகுதியில் தங்களது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார். புதிய கிளைத் தொடக்கத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு அதிரடிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நகைகளின் செய்கூலி மற்றும் சேதாரத்தின் மீது 30 சதவீத தள்ளுபடியும், அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒரே மாதிரியான நிறுவனத்தின் ‘சிறப்பு தங்கப் பலகை விலை’ பலனும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், தூய்மைக்கான உத்தரவாதத்துடன் கூடிய நிறுவனத்தின் பிரத்தியேக ‘4-அடுக்கு உத்தரவாதச் சான்றிதழ்’ அனைத்து நகைகளுக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முகூர்த், முத்ரா, நிமா, லிலா உள்ளிட்ட கல்யாண் நிறுவனத்தின் புகழ்பெற்ற அனைத்து பிராண்டட் நகைத் தொகுப்புகளும் இக்கிளையில் வாடிக்கையாளர்களுக்காகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *