உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஒய்யாரமாக உலா வரும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் – ஆதாரங்களுடன்!!

கோவை

நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தலைமை நீதிமன்றமும் மற்றும் உச்சபட்ச அதிகாரமும் கொண்டது தான் உச்சநீதிமன்றம்.

இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவை நாட்டின் உயர் பதவியில் உள்ளவர் முதற்கொண்டு சாமானியர் வரை மதித்து பின்பற்ற வேண்டும்.

ஆனால் அந்த உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் தங்களை தேவதூதர்கள் போல நினைத்துக் கொண்டு உலாவருகின்றனர் சில கோவை மாநகராட்சி அதிகாரிகள்.
அதுபற்றிய விபரம் பின்வருமாறு.

இந்தியாவில் விஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அரசு ஊழியர்களின் தனிப்பட்ட வாகனங்களில் சைரன் அல்லது ஒளிரும் சுழல் விளக்குகள் எதையும் பொருத்தக்கூடாது என்று இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ காவல்துறை வாகனங்கள் மட்டுமே சைரன்களை பயன்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் அல்லது அமைச்சர்களாக இருந்தாலுமே அவர்களின் தனிப்பட்ட வாகனங்களில் சைரன் மற்றும் சுழல் விளக்குகளை பயன்படுத் தக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வ அரசு வாகனங்களில் பயணித்தாலும் அவசர கால கடமைகளில் ஈடுபடாத வரை சுழல் விளக்குகளை பயன்படுத்திக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடுமையான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மீறினால் மோட்டார் வாகன சட்ட பிரிவு 177 ன்படி 5000 ரூபாய் அபராதமும், அந்த வாகனங்களை போக்குவரத்து காவல்துறை -மூலம் பறிமுதலும் செய்யப்படும்.

மேலும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆனால் இந்த உத்தரவையெல்லாம் புறம் தள்ளி கோவை மாநகராட்சியின் உயர் பொருப்பில் இருக்கும் துணை ஆணையர்களின் வாகனங்களிலும், நகரப் பொறியாளரின் வாகனத்திலும் சைரன் விளக்கு பிரகாசமான ஒளிர்ந்து வருகிறது.

துணை ஆணையர்களின் 2வாகனத்திலும் அவர்களின் 2 பொலிரோ வாகனத்திலும் சுழல் விளக்கு இருப் பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அப்பட்டமாக மீறும் செயல்.

அதை விட கொடுமை என்ன வென்றால் நகர பொறியாளரின் வாகனத்தில் சுழல் விளக்கு மின்னுவதோடு தமிழக அரசால் கொடுக்கப்படாத புதிய பதவியின் பெயரில் நேம் போர்டு அதாவது நகர பொறியாளர் (City Engineer) என்பதற்க்கு மாறாக முதன்மை பொறியாளர்(Chief Engineer) என்ற அரசு அறிவிக்காத ஒரு பதவியின் பெயரில் நேம் போர்டு மாற்றப்பட்டு கோவை மாநகர வீதிகளில் இந்த வாகனம் உலா வருகிறது.

இது போன்ற இல்லாத ஒரு பதவியின் பெயரில் நேம் போர்டை காரில் வைத்துக் கொள்ளவும், சுழல் விளக்கு வைத்துக் கொள்ளவும் இவர்களுக்கு இந்த உச்சபட்ச அதிகாரத்தை கொடுத்தது யார்? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே உதாசீனப்படுத்தும் அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்? இது போன்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தனது பதவியின் பெயரை துணிந்து மாற்றி உலா வரும் அதிகாரிகள் மீது கடும் வடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மற்ற அதிகாரிகளுக்கும் தவறு செய்யும் எண்ணம் வராது.

கோவை மாநகராட்சி ஆணையர் இந்த ஆதாரங்களை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பாரா என்று பார்ப்போம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *