மக்கள் தொகை சுய கணக் கெடுப்பு தொடக்கம்: பொதுமக்கள் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் ; ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வேண்டு கோள்!!

சென்னை:
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு நேற்று தொடங்கிய நிலையில் பொதுமக்கள் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, நடைபெற உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று இரண்டு கட்டங்க ளாக நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சுய கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. பொது மக்கள், https://se.census.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். 16 மொழிகளில் பதிவேற்றம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன.

இப்பணிகள், வரும் 31-ம் தேதி வரை நடைபெறும். இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இது.

சுய கணக்கெடுப்பு பதிவேற்றத்துக்குப் பிறகு, ஒரு அடையாள எண் உருவாக்கப்படும். அதை பொது மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் முதல்வர் விஜய் சுய கணக்கெடுப்பு இணைய தளத்தில் தனது விவரங்களை பதிவு செய்தார்.

அதேபோல், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற் றுக்கு ஆதரவளிக்கும் வகையில், விரிவான, துல்லியமான மற்றும் நம் பகமான மக்கள் தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதித் தரவுகளை உருவாக்கும் நோக்கில், நாட்டின் மிக முக்கியமான தேசிய தரவு சேகரிப்புப் பணிகளில் ஒன்றான 2027-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் அனைவரும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும்.

தமிழக மக்களின் ஒத்துழைப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும், மாநில மற்றும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளத்தை வலுப்படுத்துவதற்கும் கணிசமாகப் பங்களிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *