வீட்டுவசதி வாரிய தலைவராக வி.சிவா நியமனம் !! தமிழக அரசு உத்தரவு …

சென்னை:
வீட்டுவசதி வாரிய தலைவராக வி.சிவாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக இருந்த பூச்சி எஸ். முருகன் அளித்த ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டு அவர் கடந்த மே.5-ம் தேதியுடன் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த சிவா, ஜூலை 21 முதல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்படுகிறார்.

புதிய தலைவருக்கான ஊதியம், சலுகைகள் மற்றும் பிற பணி நிபந்தனைகள் குறித்த அரசாணை பின்னர் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதிய தலைவராக நியமிக்கப் பட்டுள்ள சிவா, தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளரா கவும், முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *