வியாசர்​பாடி டாக்​டர் அம்​பேத்​கர் கலைக் கல்​லூரி​யில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்​புணர்வு முகாம்!! இலச்சினை வெளியிட்ட காவல் ஆணையர் ஏ.அமல்​ராஜ் !!

சென்னை: ​
வியாசர்​பாடி டாக்​டர் அம்​பேத்​கர் கலைக் கல்​லூரி​யில் நேற்று போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்​புணர்வு முகாம் நடை​பெற்​றது.

சென்னை காவல் ஆணை​யர் ஏ.அமல்​ராஜ் நிகழ்ச்​சியை தொடங்​கி​வைத்​து, மாணவர்​கள் மத்​தி​யில் பேசி​ய​தாவது:

இன்​றைய சமூகத்​தில் சாலை விபத்​துகள், சைபர் மோசடிகள் மற்​றும் போதைப்​பழக்​கம் ஆகியவை மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளன.

சாலை விதி​களை முறை​யாக கடைபிடித்​தால் பெரும்​பாலான விபத்​துகளைத் தவிர்க்க முடி​யும். தமிழகத்​தில் பொது​மக்​கள் தின​மும் ரூ.13 கோடி முதல் ரூ.15 கோடி வரை சைபர் மோசடிகளால் பணத்தை இழக்​கின்​றனர். அறி​யாமை, விழிப்​புணர்வு இல்​லாததே இதற்கு முக்​கிய காரணம்.

போதைப் பொருள், மது ஆகியவை ஒரு​வரின் குடும்​பத்​தை​யும் சமூகத்​தை​யும் சீரழிக்​கும். எனவே மாணவர்​கள் தங்​களை பாது​காத்​துக் கொள்ள வேண்​டும் என்​றார்.

முன்​ன​தாக நடைபெற்ற விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யில், `வாழ்​வைத் தேர்ந்​தெடுங்​கள், போதைக்கு இல்லை சொல்​லுங்​கள்’ என்ற தலைப்​பில் மாணவர்​களின் மவுன நாடகம் அரங்​கேற்​றப்​பட்​டது.

தொடர்ந்து சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ், `நான் போதைப் பொருளுக்கு எதி​ரானவன்’ என்ற வாசகத்​துடன் கூடிய புதிய போதைப் பொருள் எதிர்ப்பு இலச்​சினையை அறி​முகப்​படுத்​தி​னார்.

தொடர்ந்து அவரது தலை​மை​யில் சுமார் 6 ஆயிரம் பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவ-​மாணவிகள் போதைப் பொருளுக்கு எதி​ராக உறு​தி​மொழி ஏற்​றனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் கூடு​தல் காவல் ஆணை​யர் கபில் குமார் சி.சரத்​கர், கல்​லூரி முதல்​வர் கே.சிவகு​மாரி, ஐஐடி மெட்​ராஸ் சமூக முன்​முயற்சி மற்​றும் வெளித்​தொடர்​பு தலை​வர்​ என்​.ஹரி​கிருஷ்ணன்​ உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *