தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை வருகை: பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்!!

சென்னை;
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளில், இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் டெல்லியில் இருந்து நேற்று பிற்பகலில் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் தலைமையிலான குழுவினரை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

அப்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் மணீஷ் கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளன.

அதற்கான தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் குழுவினராகிய நாங்கள் சென்னை வந்திருக்கிறோம். தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை பணி யாகும்.

அதன்படி, ஆய்வுக்காக நாங்கள் வந்திருக்கிறோம். மாநில நிர்வாக அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆயத்தக் கூட்டங்கள் நடத்தி, தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார்கள் மூலம் புதுச்சேரி மாநிலத்துக்கு சென்றனர்.

புதுச்சேரியில், அந்த மாநில அரசு அதிகாரிகளுடன் ஆய்வை நடத்திவிட்டு, சென்னைக்கு திரும்புகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் விரைவில் சென்னை வரவுள்ளனர்.

அவர்கள் தமிழக அரசு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வருமானவரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கியது. அப்போது தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்தது.

முதல் கட்ட எஸ்ஐஆர் பணிகள் முடிந்த நிலையில், வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இருந்தனர். வாக்காளர்களில் இறந்தவர்கள் 26.95 லட்சம் பேர் உட்பட 97.37 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து டிச.19 முதல் கடந்த ஜன.31 வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

அதில், நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பெயர் சேர்க்க 22.84 லட்சம் பேர் உட்பட 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், வரும் பிப்.17ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இதற்கான பட்டியல் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பின், புதியவாக்காாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *