டாஸ்​மாக்​ தனி​யார்​ மயமாகிறது; அமைச்சர்​ விக்னேஷ் சூசக தகவல்​!!

திண்​டுக்​கல்​:
மது​பான விற்​பனை​யில்​ ரெஸ்​டோ பார்​, தனி​யார்​ம​யம்​ குறித்​து ஆலோ​சித்​து வரு​கிறோம்​.

டாஸ்​மாக்​ தனி​யார்​ மயமாகிறது என தமிழக மது​விலக்​கு மற்​றும்​ ஆயத்​தீர்​வை துறை அமைச்​சர்​ விக்​னேஷ் தெரி​வித்​தார்​.

திண்​டுக்​கல்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ அலு​வல​கத்​தில்​ பல்​வேறு துறை அதி​காரி​களு​ட​னான ஆய்​வுக்​ கூட்​டம்​, மாவட்​ட ஆட்​சி​யர்​ துர்​காமூர்த்​தி முன்​னிலை​யில்​ நேற்​று நடை​பெற்​றது.

அமைச்​சர்​ விக்​னேஷ் கலந்​து​கொண்​டு துறை​வாரி​யாக வளர்ச்​சித்​ திட்​டங்​கள்​ குறித்​து ஆய்​வு நடத்​தி​னார்​.

தொடர்ந்​து முடிவுற்​ற திட்​டப்​ பணி​களை திறந்​து​வைத்​து, பயனாளி​களுக்​கு நலத்​திட்​ட உதவி​களை வழங்​கி​னார்​.

பின்​னர்​ அமைச்​சர்​ செய்​தி​யாளர்​களிடம்​ கூறிய​தாவது: தமிழகம்​ முழு​வதும்​ மது​பானக்​ கடைகளில்​ மது​பாட்​டில்​கள்​ தேக்​கமடைந்​துள்​ளதை திரும்​பப்​பெற கோரப்​பட்​டுள்​ளது.

மது குடிப்​போர்​ எதை விரும்​பு​கிறார்​களோ, அந்​த மது பாட்​டில்​களை மட்​டும்​ கொள்​முதல்​ செய்​ய முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

திண்​டுக்​கல்​ அரு​கே சிறுமலை, ஜல்​லிப்​பட்​டி பகு​தி​களில்​ சில்​லிங்​ மது விற்​பனை செய்​பவர்​கள்​ மீது கடும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​.

எங்​கிருந்​து மது​பாட்​டில்​களை வாங்​கு​கிறார்​கள்​ எனக்​ கண்​டு​பிடித்​து, மது​பாட்​டில்​களை விற்​பனைக்​கு கொடுத்​தவர்​கள்​ மீதும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​.

ரெஸ்​டோ பார்​, தனி​யார்​மயம்​ என்​பது குறித்​து கலந்​து ஆலோ​சித்​தோம்​. மது விற்​பனை தனி​யார்​மய​மாகிற​தா என்​றால்​ ஆமாம்​, இந்​த துறையை சரிசெய்​ய பல்​வேறு நடவடிக்​கை​களில்​ இறங்​கி உள்​ளோம்.

ஆனால்​, மக்​கள்​ வேண்​டாம்​ என்​றால்​ இந்​த அரசு அதை செய்​யாது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​. நிலக்​கோட்​டை எம்எல்​ஏ அய்​ய​னார்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *