திமுக ஆட்​சி​யின்​போது நடை​பெற்ற சட்​டக் குளறு​படிகளால்​தான் மேகே​தாட்டு விவ​காரம் தற்​போது மிகப்​பெரிய சோதனை​யாக மாறி​யுள்​ளது !! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்….

சென்னை:
கடந்த திமுக ஆட்​சி​யின்​போது நடை​பெற்ற சட்​டக் குளறு​படிகளால்​தான் மேகே​தாட்டு விவ​காரம் தற்​போது மிகப்​பெரிய சோதனை​யாக மாறி​யுள்​ளது என்று பொதுப்​பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரி நதிநீர் மற்​றும் மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக அரசு மெத்​தன​மாக இருப்​ப​தாக முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லின் கூறு​வது உண்​மைக்​குப் புறம்​பானது.

டெல்டா விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​தை​யும், தமிழகத்​தின் நீர் உரிமை​யை​யும் பாது​காக்க முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு தொடர்ந்துஉறு​தி​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

ஸ்டா​லின் தலை​மையி​லான திமுக ஆட்​சி​யின்​போது, மேகே​தாட்டு விவ​காரத்​தில் சட்ட ரீதி​யான பின்​னடைவு​கள் ஏற்​பட்​டன.

கர்​நாட​கா​வின் திட்ட அறிக்​கையை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​கள், சீராய்வு மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன.

தமிழக உரிமை​யைக் காக்​கும் கடைசி வாய்ப்​பாக இருந்த மறுசீ​ராய்வு மனு மீதும் அன்​றைய திமுக அரசு வலு​வான வாதங்​களை முன்​வைக்​க​வில்​லை.

கடந்த காலத்​தில் நடை​பெற்ற இத்​தகைய சட்​டக் குளறு​படிகளால்​தான் மேகே​தாட்டு விவ​காரம் இன்று மிகப்​பெரிய சோதனை​யாக மாறி​யுள்​ளது.

நாங்​கள் கடந்​த ​கால தவறுகளைப் பேசுவதன் நோக்​கம் தமிழகத்​தின் உரிமைக் குரலை திசை​திருப்​புவது அல்ல.

எங்​களுக்கு அது​போன்ற குறுகிய அரசி​யல் எண்​ண​மும் கிடை​யாது. ஆக்​கப்​பூர்​வ​மான விமர்​சனங்​கள் யாரிடம் இருந்து வந்​தா​லும் ஏற்​கத் தயா​ராக இருக்​கிறோம்.

காவிரி விவ​காரம் என்​பது அரசி​யல் ஆதா​யத்​துக்​கான கணக்கு அல்ல. அது தமிழக மக்​களின் வாழ்​வுரிமைப் பிரச்​சினை.

காவிரி நடு​வர் மன்​றம் மற்​றும் உச்​ச நீ​தி​மன்​றத் தீர்ப்​பு​கள் முழு​மை​யாக அமல்​படுத்​தப்​படும் வரை, முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு சட்​டப்​பூர்​வ​மாக​வும், அரசி​யலமைப்பு ரீதி​யாக​வும் தொடர்ந்து போராடும்.

தமிழக விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்தை மீட்​கும் வரை இந்​த அரசு ஓயாது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *