தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நடிக்க ப்ரீத்தி முகுந்தனிடம் பேச்சுவார்த்தை!!

சென்னை:
தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நடிக்க ப்ரீத்தி முகுந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.

‘ஓம்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் நாயகியாக நடிக்க ப்ரீத்தி முகுந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ‘ப்ளாஸ்ட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு பெரிய படங்களில் நடிக்க ப்ரீத்தி முகுந்தனுக்கு வாய்ப்புகள் வந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு தேதிகளை வைத்தே தனுஷுக்கு நாயகியாக நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

’லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால், இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், இப்படத்துக்கு ‘நரம்பன்’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும், தனுஷ் கோயில் பூசாரியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *