“கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர் காமராஜர்” – எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி !!

சென்னை,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது புகைப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கர்ம வீரர், பெருந்தலைவர், கல்வி கண் திறந்தவர் என போற்றப்படும் முன்னாள் முதலமைச்சர் காமராசரின் பிறந்தநாள், இன்று ( ஜூலை 15) கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி தலைவர்கள் பலரும் காமராசரின் சாதனைகளை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்தவகையில் காமராசர் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர்!!

சத்துணவு தந்து மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர்

நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *