உலக பாட்மிண்டன் சாம்பியன் ஷிப்; போராடி தோல்வி அடைந்​த பி.வி.சிந்து, ஆயுஷ்!!

புதுடெல்லி:
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் டெல்​லி​யில் உள்ள இந்​தி​ரா​காந்தி விளை​யாட்டு மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று மகளிர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, போட்​டித் தரவரிசை​யில் 7-வது இடத்​தில் உள்ள ஜப்​பானின் ரின் இவாங்​கா, கீ நாக​னிஷி ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. இதில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி, போட்​டித் தரவரிசை​யில் 11-வது இடத்​தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் அல்வி ஃபர்​ஹானுடன் மோதி​னார்.

45 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஆயுஷ் ஷெட்டி 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரி​வில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, உலகத் தரவரிசை​யில் 3-வது இடத்​தில் உள்ள சீனா​வின் வாங் ஷீ யி-​யுடன் மோதி​னார்.

இதில் பி.வி.சிந்து 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்கள் நடை​பெற்​றது.

சாட்விக் – ஷிராக் ஜோடி கலப்பு இரட்​டையர் பிரி​வில் கால் இறுதிக்கு முந்​தைய சுற்​றில் இந்​தி​யா​வின் தனிஷா கிரஷ்டோ, துருவ் கபிலா ஜோடி 16-21, 5-21 என்ற செட் கணக்​கில் சீனா​வின் சென் ஃபங்​ஹுய், குவோ சின்வா ஜோடி​யிடம் தோல்வி அடைந்தது.

ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசி​யா​வின் ஜுனைதி ஆரிஃப், யாப் ராய் கிங் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது.

இ​தில் சாட்விக் – ஷிராக் ஜோடி 21-23, 21-19, 21-17 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *