மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்…

மேஷம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தொல்லை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

ரிஷபம்

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். கடினமான வேலைகளைக்கூட சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மிதுனம்

மனக்குழப்பம் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். தந்தை வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.

கடகம்

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சந்தித்த நண்பர்கள் சந்தோஷமான செய்தியைத் தருவர்.

சிம்மம்

யோகமான நாள். சொத்துகள் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கன்னி

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

துலாம்

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறும் நாள். சகோதர வழியில் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.

விருச்சிகம்

தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். நேற்றையப் பணியை இன்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

தனுசு

காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும்.

மகரம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பற்றாக்குறைகள் அகலும். வாக்குவாதம் செய்தவர்கள் மனம் மாறுவர். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

கும்பம்

இன்பங்கள் கூடும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். அயல்நாடு செல்லும் முயற்சி கைகூடும். வீடு மாற்றங்கள் நன்மை தரும்.

மீனம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வருமானத்தை உயர்த்த திட்டம் தீட்டுவீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *