ஜெய​ராம், சிம்​ரன் முதன்​மைப் பாத்​திரங்​களில் நடிக்​கும் படத்​தின் தொடக்க விழா!!

சென்னை:
ஜெய​ராம், சிம்​ரன் முதன்​மைப் பாத்​திரங்​களில் நடிக்​கும் படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

ஃபேமிலி ரொமான்​டிக் காமெடி படமான இதில் பொன்​வேல், தேவிகா சதீஷ், பகவதி பெரு​மாள் உள்பட பலர் நடிக்​கின்​றனர். தீபக் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்​கிறார். கவுதம் ராஜ் இயக்​கு​கிறார்.

ஒயிட் கார்​பெட் பிலிம்ஸ் சார்​பில் கே.​விஜய​பாண்​டி மற்​றும் ஷாஜ​கான் ஜி இணைந்து தயாரிக்​கின்​றனர். த ஷோ பீப்​பிள் சார்​பில் ஆர்யா இப்​படத்தை வழங்​கு​கிறார்.

“ஜென் ஸீ தலை​முறை, 2கே தலை​முறை மற்​றும் 90-களில் வளர்ந்த தலை​முறை ஆகியோ​ருக்கு இடையி​லான உறவு​களை​யும், அவர்​களின் வாழ்க்​கை​யில் நடை​பெறும் சுவாரஸ்​ய​மான சம்​பவங்​களை​யும் மைய​மாகக் கொண்டு இப்​படம் உரு​வாகிறது.

குடும்​பத்​துடன் ரசிக்​கும் வகையி​லான பொழுது​போக்கு திரைப்​பட​மாக உரு​வாகி வரு​கிறது” என்​றது படக்​குழு.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *