சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற ஆர்தர் பில்ஸ், கோகோ காப்… !!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-3, 1-6, 6-0 என வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டு சுமார் 1 மணி நேரம் 28 நிமிடம் நடைபெற்றது.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆர்தர் பில்சுக்கு 11 கோடி ரூபாயும், கோகோ காப்புக்கு 10 கோடி ரூபாயும் பரிசாகக் கிடைத்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *