மான்டி கார்லோ டென்னிஸ்: காஸ்பர் ரூட்டை எளிதாக வீழ்த்தி சிட்சிபாஸ் சாம்பியன்!!

மான்டி கார்லோ டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் 8-ம் நிலை தரநிலை வீரரான நார்வேயினி் காஸ்பர் ரூட்- 12-ம் தரநிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

தரநிலையில் 1-ம் இடம் பிடித்திருந்த ஜோகோவிச்சை வீழ்த்தி ரூட், 2-ம் நிலை வீரர் சின்னரை வீழ்த்தியிருந்த சிட்சிபாஸ்க்கு கடும் நெருக்கடி கொடுப்பார். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் எனக் கருதப்பட்டது.

ஆனால் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-1 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும் எளிதாக கைப்பற்றி ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ரூட் அரையிறுதியில் ஜோகோவிச்சை 6-4, 1-6, 6-4 என வீழ்த்தியிருந்தார். சிட்சிபாஸ் சின்னரை 6-4, 3-6, 6-4 என வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *