நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய பெரும்பாலான கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் ஒரே ஒரு மாடி வீடு மட்டும் ஸ்ட்ராங்காக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது!!

காத்மாண்டு:
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய பெரும்பாலான கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் ஒரே ஒரு மாடி வீடு மட்டும் ஸ்ட்ராங்காக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதனால் நெட்டிசன்கள் அதை கட்டிய என்ஜினீயருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

நேபாளத்தின் கோஷி ஆற்றில் கடந்த 26ஆம் தேதி காலையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் சீன எல்லையை ஒட்டிய பகுதிகள் முழுவதையும் துவம்சம் செய்தது.

கோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டேவின் நீரோட்டத்தை பனிச்சரிவு ஒன்று தடுத்ததால் ஏரி உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

சுனாமி பேரலை போல் 20 அடி உயரத்திற்கு வெள்ளம் ஏற்பட்டு நொடி பொழுதில் நீர் தேக்கங்கள், நீர் மின் நிலையங்கள், 19 பாலங்கள், ஏராளமான வீடுகள் ஆகியவற்றை அப்படியே வாரி சுருட்டிக் கொண்டது.

சீனாவையொட்டிய நேபாளத்தின் 8 மாவட்டங்களில் இந்த வெள்ள பாதிப்பு கடுமையாக இருந்தது.

மேலும் இமயமலையில் இருந்து கற்கள், சேறு, சகதி எல்லாம் அடிவரப்பட்டு பல உயரத்திற்கு தேங்கியுள்ளது. அவற்றில் நடந்து சென்றே மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள்.

5ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 616 ஆக உயர்ந்துள்ளது.

அது போல் 2000-க்கும் மேற்பட்ட நபர்களை காணவில்லை. அவர்களை தேடி வருகிறார்கள். பல உயர அடியில் வெள்ளம் தாக்கியதால் பலர் தூக்கி வீசப்பட்டதில் உடல்கள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த கோஷி ஆற்றில் மீண்டும் சேறு, நீர் மட்டம் உயர்ந்து ள்ளதால் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த பெருவெள்ளத்தால் நீர் மின் நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்டவை மூழ்கியதை போல் பல்லாயிரக்கணக்கான வீடுகளும் மூழ்கின.

அது போல் பல்வேறு கிராமங்களும், சாலைகளும் மூழ்கின. வெள்ளத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், வலுவான பல வீடுகள் அடியோடு பெயர்த்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு மாடி வீடு மட்டும் அப்படியே ஸ்ட்ராங்காக இருந்து வருகிறது.

அந்த மாடி வீட்டில் மக்கள் வசிக்கிறார்கள். அந்த கட்டடக் கலையின் மீதான நம்பிக்கையால் மக்கள் அந்த வீட்டின் பால்கனியில் இருந்து எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.

சுற்றியுள்ள வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் காணாமல் போன நிலையில் இந்த வீட்டில் வசித்து வந்தவர்கள் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர்.

பால்கனியில் அந்த குடும்பத்தினர் நின்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த வீட்டின் மீதும், அந்த வீட்டின் என்ஜினியர் மீதும் அந்த மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பலரும் பெரிதாக பேசி வருகிறார்கள்.

நீரோட்டம் எந்த திசையில் செல்கிறதோ, அந்த அழுத்தத்தை தாங்கும் வகையில் தூண்கல், சுவர்கள் மிகவும் தரமானதாக அமைக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *