கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!!

சென்னை:
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ஆகஸ்ட் 13-ல் தொடங்கிய இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இது குறித்து ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தர்மன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஸ்வாக் மோட் (SWAG Mode) ஆன்’ என்று தெரிவித்துள்ளது. மேலும் சில படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ‘இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. சூப்பர் ஸ்டார் அற்புதமாக இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தில் அவருடன் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *