சென்னை:
ஜெய் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் யோகிபாபு, ராஜீவ் மேனன், நாசர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிக்கின்றனர்.
கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி உள்ளார். இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.