இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்!!

இங்கிலாந்து ;
இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் தேதி பவுலா மற்று்ம டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

“இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் விசித்திரமான விஷயம்,” என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


கடற்பகுதிகளில் விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல.

கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்தார். இது சமூக ஊடகங்களில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *