மும்பை–கோவா நெடுஞ் சாலை விரி​வாக்​கப் பணி​கள் தாமத​மாகி வரு​வ​தால் அதன் தொடக்க விழா​வில் பங்​கேற்க மாட்டேன் – நிதின் கட்கரி அறிவிப்பு !!

பனாஜி:
மும்பை–கோவா நெடுஞ்சாலை விரி​வாக்​கப் பணி​கள் தாமத​மாகி வரு​வ​தால் அதன் தொடக்க விழா​வில் பங்​கேற்க மாட்டேன் என்று மத்​திய அமைச்​சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலம், பனாஜி அருகே போர்​வோரிமில் புதி​தாக அமைக்​கப்​பட்ட ஆறு வழிச்​சாலை உயர்​மட்​டப் பாதையை, மத்திய சாலைப் போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி நேற்று முன்​தினம் திறந்து வைத்​தார்.

பின்​னர் அந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: மும்​பை–கோவா நெடுஞ்​சாலை விரி​வாக்​கத் திட்​டப் பணி​கள் 2011-ல் தொடங்​கப்​பட்​டன.

பழைய இரு​வழிச் சாலையை நான்கு வழிச்​சாலை​யாக மாற்​று வதுதான் இத்​திட்​டத்​தின் நோக்​க​மாகும். இத்​திட்​டம் 2016-க்​குள் நிறைவடை​யும் என்று எதிர்​பார்க்கப்​பட்​டது. ஆனால், அவ்​வப்​

போது காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்டு சுமார் 15 ஆண்​டுகளாக பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இத்​திட்​டத்​துக்​காக சுமார் ரூ.16 ஆயிரம் கோடி செல​விடப்​பட்​டுள்​ளது.

வரும் அக்​டோபரில் மும்​பை​யில் இருந்து கோவாவுக்கு சாலை வழி​யாகப் பயணம் செய்​து, இச்​சாலையை நேரில் ஆய்வு செய்ய உள்​ளேன்.

பயணிகளுக்கு பயணம் செய்​வதற்கு வசதி​யாக மாறி​யுள்​ளதா என்​பதை​யும் மதிப்​பிடுவேன். மும்​பை–கோவா நெடுஞ்​சாலை விரி​வாக்​கப் பணி​கள் இவ்​வளவு காலம் தாமத​மானது எனக்கு வெட்கமாக உள்​ளது.

எனவே, அதன் தொடக்க விழாவுக்கு நான் வரமாட்​டேன். மேலும், உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களில் தாமதம் மற்​றும் மோச​மான பணி​களுக்​குக் காரண​மான ஒப்​பந்​த​தா​ரர்​கள் தகுதி நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள்.

அத்​துடன், இதில் தொடர்புடைய அதி​காரி​கள் மீதும் நடவடிக்​கை எடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *