சென்னை:
மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 512 தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.
அரசு வழிகாட்டுதலின்படி தற்காலிக செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு 50 வயதுக்கு மிகாமல் செவிலியர் பட்டயப்படிப்பு, இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றவர்கள், தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முறையான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகர நல அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலர், சென்னை மாநகர நலச் சங்கம், பொது சுகாதாரத்துறை, ரிப்பன் கட்டிட வளாகம், 3-ம் தளம், அம்மா மாளிகை, ஈவெரா பெரியார் சாலை, சென்னை-600 003 என்ற முகவரிக்கு செப்.25-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.