22 காரட் ஆபரணத் தங்கத் தின் விலை சென்னையில் இன்று பவுனுக்கு ரூ.1,160 என உயர்வு!!

சென்னை:
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.18) பவுனுக்கு ரூ.1,160 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.

இதோடு கடந்த 1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 என குறைந்து விற்பனையானது.

இன்றைய விலை விவரம்:

இந்நிலையில், சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங் கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,155-க்கு விற்பனையாகிறது. பவுனு க்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,13,240-க்கு விற்பனையா கிறது.

சென்னையில் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.158 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,442-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.255-க்கு விற் பனை ஆகிறது. கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,55,000-க்கு விற்பனை ஆகிறது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதேவேளையில், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் ஆபரணத் தங்கம் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *