சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டவர்; இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளில் நயினார் புகழ் அஞ்சலி!!

சென்னை:
தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளு க்காகவும் அயராது பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று!

‘பறையன்’ இதழைத் தொடங்கி, கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.

சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர், மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.

அவரது சமூக நீதிப் பயணத்தையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் இந்நாளில் போற்றி வணங்கி, அவரது புகழைத் தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும்.” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *