மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக் கான இன்றைய ராசிபலன்…

மேஷம்

முன்னேற்றம் கூடும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

ரிஷபம்

ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்.

மிதுனம்

மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

கடகம்

ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகப் பிரச்சனை நீடிக்கும்.

சிம்மம்

நண்பர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். புதிய முயற்சியில் வெற்றி உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்.

கன்னி

வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். புது முயற்சிகள் வெற்றி பெறும்.

துலாம்

பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி வந்து சேரும் நாள். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் அகலும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக்கொள்ள நேரிடும்.

விருச்சிகம்

யோகமான நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு மதிப்பளிப்பர்.

தனுசு

வரவு திருப்தி தரும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.

மகரம்

மனக்குழப்பம் அகலும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மருத்துவச் செலவு உண்டு. உத்தியோகத்தில் பிரச்சனைகள் நீடிக்கும்.

கும்பம்

வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் உண்டு. உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *