ஓமந்துாரார் அரசு பல்​நோக்கு மருத்​து​வ​மனை​யில் அம்மா உணவகம் அமைக்க மாநக​ராட்சி மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம்!!

சென்னை:
ஓமந்துாரார் அரசு பல்​நோக்கு மருத்​து​வ​மனை​யில் அம்மா உணவகம் அமைக்க மாநக​ராட்சி மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

சென்னை மாநக​ராட்சி மன்​றக் கூட்​டம் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் முன்​னிலை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மேயர் பிரியா பேசி​ய​தாவது:

சட்​டப்​பேர​வை​யில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினை கண்​ணி​யக்​குறை​வாக விமர்​சித்த முதல்​வருக்கு கண்​டனத்தை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

தமிழகத்​தில் தவெக அரசு பொறுப்​பேற்ற 4 மாதங்​களில் தமிழகம் முழு​வதும் குற்ற சம்​பவங்​கள், கொலைகள், பாலியல் வன்​முறை​கள் அதி​கரித்​துள்​ளன.

சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை​கள், ஏழை எளிய மக்​களை பெரிதும் பாதிக்​கும் விலை​வாசி உயர்​வு, ஆவின் பால் தட்​டுப்​பாடு, மின் கட்டண உயர், இரவு நேரங்​களில் மின்​வெட்​டால் தூக்​கமிழந்து தவிக்​கும் மக்​கள் என நிர்​வாக சீர்​கெட்​டால் தமிழகம் பின்​னுக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது.

பரந்​தூர் விமான நிலைய திட்​டம் ரத்து மற்​றும் மீனம்​பாக்​கம் விமான நிலை​யத்தை தனி​யாருக்கு தாரை​வார்க்க பிரதமரை வலி​யுறுத்​து​வது போன்ற எண்​ணற்ற தமிழகத்​துக்கு எதி​ரான நடவடிக்​கைகளை இந்த அரசு எடுத்து வரு​வது கண்​டிக்​கத்​தக்​கது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

அவை​யில் அம்​பேத்​கர் படம் இடம் மாற்​றம் செய்​யப்​பட்​டதற்கு விசிக கவுன்​சிலர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதனால் விசிக, திமுக கவுன்​சிலர்​களிடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரி​யா, ‘‘இந்த மாமன்​றத்​தில் அம்​பேத்​கர் படம் வைத்​ததே திமுக ஆட்​சி​யில்​தான்.

அம்​பேத்​கரை யாரும் சொந்​தம் கொண்​டாட முடி​யாது. அவர் அனை​வருக்​கு​மானவர்’’ என்​றார். இதையடுத்து விசிக கவுன்​சிலர்​கள் வெளிநடப்பு செய்​தனர்.

தொடர்ந்​து, மாநகரில் செல்​லப்​பி​ராணி​களை கைவிடு​வோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்​க​வும், ஓமந்​தூ​ரார் அரசு பல்​நோக்கு மருத்​து​வ​மனை​யில் அம்மா உணவகம் அமைக்​க​வும், நுங்​கம்​பாக்​கம் லேக் ஏரியா 5-வது குறுக்கு தெரு​வின் பெயர், மறைந்த திரைப்பட இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ் நினை​வாக, ‘டைரக்​டர் கே.​பாக்​ய​ராஜ் தெரு’ என பெயர் மாற்​றம் செய்ய அரசின் அனு​மதி பெற அனு​மதி வழங்​கி​யும்​ மொத்​தம்​ 21 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *