ஜெம் வீரமணி வழக்கு ….. நீதிமன்றத்தை தவெகவினர் மதிக்க வேண்டும் – ஐகோர்ட் நீதிபதி அறிவுரை!!

சென்னை:
ஜெம் வீரமணி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை திமுகவினர் பின்பற்றி வருவதாகவும், ஆனால் தவெகவினர் இந்த விவகாரம் குறித்து தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றத்துக்கு தவெகவினர் மரியாதை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை தவெகவினர் பின்பற்றவில்லை என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர்.

அதேபோல, தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவும், திமுக அரசுக்கு எதிராக குற்றம்சாட்டி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.

இது திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றம்சாட்டி கருத்துகள் தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தடை விதிக்க கோரி, திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

மேலும், ஜெம் வீரமணிக்கு எதிராக 2025-ம் ஆண்டு அக்.6-ம் தேதி புகார் வந்த நிலையில், மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், எந்த தலையிடும் இல்லாமல், எந்த தாமதமும் செய்யப்படாமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

உண்மை நிலைக்கு மாறாக திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் ஐ.டி. பிரிவு அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டி அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமைச் சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

மேலும் நீதிபதி, ‘வீரமணி தொடர்பான வழக்கை படிக்கும் போது மனம் பதறுகிறது. வழக்கு மிகவும் தீவிரமானது என்பதால், இந்த விவகாரம் குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கும், திமுகவி னருக்கும் அறிவுறுத்த வேண்டும்’ என்று இரு தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி கருத்து தெரிவிப்பது, வழக்கில் தொடர்புடையவர்கள் தப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “ஒரு பதில் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்யவில்லை” என கூறினார். இதனையடத்து, பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

தொடர்ந்து, ஜெம் வீரமணி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை திமுகவினர் பின்பற்றிவருவதாகவும், ஆனால் தவெகவினர் இந்த விவகாரம் குறித்து தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் கூறிய நீதிபதி, “நீதிமன்றத்துக்கு தவெகவினர் மரியாதை அளிக்க வேண்டும்.

இது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர்தான் கருத்தில் கொள்ள வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *