தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த தாக புகார்: அன்பில் மகேஸ் மனுவை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்!!

சென்னை:
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமை ச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, சில மாதங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்றின் தலைவர் டி.சி.இளங்கோவன் உள்ளிட்ட பல பள்ளிகளின் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஜூன் 27-ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் , தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், செப்.16-ஆம் தேதி அன்பில் மகேஸின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் சோதனை நடத் தி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்பின்னர், அன்பில் மகேஸுக்கு சம்மன் அனுப்பியதன் அடிப்படையில், செப். 18-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த நிலையில், தனக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய விலக்களிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, வழக்கை புதன்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *