முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்ற விஜய்!!

மதுரை;
முதல்வர் விஜய் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த முதல்வர் விஜய்க்கு பொன்னாடை வழங்கி வரவேற்ற முன் னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாராகராஜனின் தாயாரும், கோயில் அறங்காவலருமான ருக்மணி. அவரின் கரங்களை பிடித்து நலம் விசாரித்த முதல்வர் விஜய், பின்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் பெயர் போடாததை எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளில் குளறுபடிகள் நடந்துள்ளது.

அரசியல் தலையீடு உள்ளது.. பக்தர்கள் பாதுகாப்பு, அனுமதி அட்டைகள் விநியோகம் ஆகியவற்றில் குளறுபடி இருக்கிறது என தவெக அரசு மீது அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் அதிருப்தி தெரிவித்த நிலையில், முதல்வர் விஜய் அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *