விஜய் வரும் வழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர், உட்பட தொண்​டர்​கள் 100 பேர் கைது!!

தாராபுரம்:
தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்​து தாராபுரத்தில் முதல்​வர் விஜய் நேற்று வாகன பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

வீராச்சிமங்​கலம் என்ற பகு​தி​யில் முதல்​வர் செல்​வதற்கு சற்று நேரத்​துக்கு முன்​பாக, நாம் தமிழர் கட்​சி​யின் வேட்​பாளர் கார்த்​திகா தொண்​டர்​களுடன் வாகன பேரணி​யாக வந்​தனர்.

முதல்​வர் வரு​கைக்​காக அங்கு நின்​றிருந்த போலீ​ஸார் பாது​காப்பு கருதி அவர்​களை மாற்று வழி​யில் செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர்.

அப்​போது நாதக​வினர் போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். அதற்​குள் முதல்​வரின் வாக​னம் அவ்​வழி​யாக வரத்​தொடங்​கியது.

இதையடுத்​து, உடனடி​யாக நாதக வேட்​பாளர் உட்பட தொண்​டர்​கள் 100 பேரை போலீ​ஸார் கைது செய்து ஊதி​யூர் பகு​தி​யில் உள்ள தனி​யார் திருமண மண்​டபத்​தில் தங்க வைத்​தனர்.

போலீ​ஸாரை கண்​டித்து நாதக​வினர் கண்டன முழக்​கங்​களை எழுப்​பினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *