பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 09ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்றும் நாளையும் 2 தினங்கள் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.
அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் 3வது இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், அதை தொடர்ந்து 3வது இருக்கையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.