உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’!…

நீண்ட காலமாக முதலிடத்தில் நீடித்து வந்த ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தின் சாதனையை இப்படம் தற்போது தகர்த்தெறிந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 25-ந் தேதி, மார்வெல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 4 நிமிட கூடுதல் காட்சிகளுடன் இத்திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர்’ (Avengers: Endgame Encore) என்ற பெயரில் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது.

ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் இந்த மறுவெளியீடு அசுர வரவேற்பைப் பெற்றது.

தங்களுக்குப் பிடித்தமான சூப்பர் ஹீரோக்களை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் காட்டிய ஆர்வம், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஜெட் வேகத்தில் உயர்த்தியது.

மறுவெளியீட்டு வசூலின் மூலம் உலக சினிமா வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம், மொத்தம் சுமார் ரூ. 28,165 கோடி வசூல் செய்து, சுமார் ரூ. 28,148 கோடி வசூலித்திருந்த ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இதன் மூலம் ரூ.17.35 கோடி வித்தியாசத்தில் ‘அவதார்’ திரைப் படத்தைப் பின்னுக்குத் தள்ளி, உலக அளவில் வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ முதலிடத்தில் மகுடம் சூடியுள்ளது.

2021-ஆம் ஆண்டு ‘அவதார்’ படம் சீனாவில் மறுவெளியீடு செய்யப்பட்ட போது முதலிடத்தை இழந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’, தற்போது தனது சிம்மாசனத்தை மீண்டும் தட்டிப்பறித்துள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்கவே இந்த மறுவெளியீடு திட்டமிடப்பட்டது.

ஆனால், அதுவே உலக பாக்ஸ் ஆபீஸில் ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனையாக மாறியிருப்பது மார்வெல் ரசிகர்களை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *