ராஷ்மிகா உடனான காதல் வாழ்க்கை குறித்து விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!… தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்…..

நேர்காணலின் போது தங்களது காதல் பிணைப்பு குறித்துப் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தன்னிடம் காட்டும் அன்பை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

“உறவுகளைக் கையாள்வதில் என்னை விடவும் ராஷ்மிகா மிகவும் முதிர்ச்சியுடையவர். தினமும் எனக்குக் குறைந்தது 10 முதல் 15 முறையாவது ‘I Love You’ என்று சொல்லிவிடுவார்.

மனதிற்குள் அன்பை வைத்துக்கொள்ளாமல், அதை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

என்னையும் அன்பை வெளிப்படையாக பேச வைத்ததே ராஷ்மிகா தான்” என விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவதன் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து பேசிய விஜய் தேவர கொண்டா, “நாம் அன்றாட வாழ்க்கைப் பணிகளில் தீவிரமாக இயங்கும்போது, சிறிய சிறிய அன்பான தருணங்களையும் வெளிப்பாடுகளையும் மறந்துவிட வாய்ப்புள்ளது.

ஆனால் ராஷ்மிகா, ‘நம்மை நேசிப்பவர்களுக்கு நாம் செய்யும் சின்ன சின்ன அன்பான விஷயங்கள் தான் உறவை வலுப்படுத்தும்’ என்பதை எனக்குத் தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே இருப்பார்.

அந்தச் சிறிய கவனிப்புகள்தான் வாழ்க்கை பயணத்தை மேலும் அழகாக்குகின்றன” என்று பேசினார்.

திரையில் இணைந்து நடித்து பின்னர் நிஜ வாழ்க்கையிலும் இணையான இந்த ஜோடியின் வெளிப்படையான இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தங்கள் அன்பையும் பரஸ்பர மரியாதையையும் பொது வெளியில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட இந்த நேர்காணல், இணையத்தில் ரசிகர்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *