ஸ்ரேயஸ் ஐயரின் கேப்​டன்​ஷிப்பை வெகு​வாக பாராட்டிய லட்​சுமண்!!

புதுடெல்லி:
ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி சமீபத்​தில் ஜப்​பானில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் பாகிஸ்​தான் அணியை 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

இந்​தத் தொடரில் இந்​திய அணி​யின் பயிற்​சி​யாள​ராக பிசிசிஐ-​யின் சிறப்பு மையத்​தின் இயக்​குந​ரான விவிஎஸ் லட்​சுமண் பணி​யாற்றி இருந்​தார்.

இந்​நிலை​யில் ஸ்ரேயஸ் ஐயரின் கேப்​டன்​ஷிப்பை லட்​சுமண் வெகு​வாக பாராட்டி உள்​ளார்.

இதுதொடர்​பாக அவர், பிசிசிஐ டி.​வி.க்கு அளித்​துள்ள நேர் காணலில் கூறி​யிருப்​ப​தாவது: கேப்​டன்சி பயணத்தை தற்​போது​தான் ஸ்ரேயஸ் ஐயர் தொடங்கி உள்​ளார்.

ஆனால், அவர் நிறைய வெற்​றிகளைப் பெறு​வார் என்​ப​தில் எனக்கு நம்​பிக்கை உள்​ளது.

அவர், வீரர்​களின் கேப்​டன். அணி​யில் உள்ள அனை​வரை​யும் மிக​வும் வசதி​யாக உணரச் செய்​கிறார். தானும் முன்​னு​தா​ரண​மாக இருந்து வழிநடத்​துகிறார்.

பேட்​டிங் அல்​லது பீல்​டிங் என எது​வாக இருந்​தா​லும், அணிக் கூட்​டத்​துக்கு முன்பே எதிரணி​யின் பலம், பலவீனங்​கள் மற்​றும் அதற்​கான திட்​டங்​களை ஸ்ரேயஸ் ஐயர் ஆராய்ந்து வைத்​திருப்​பார்.

போட்​டிக்கு தயா​ராகும் விதத்​தில் தீவிரம் காட்​டக்​கூடிய​வர். உடற்​தகு​திக்​கும் அதிக முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறார். கேப்​ட​னாக அவரது பயணம் மிக​வும் வெற்​றிகர​மாக அமை​யும்.

ஸ்ரேயஸ் ஐயர், வீரர்​களை வழிநடத்​து​வ​தில் மிகச் சிறந்​தவர். வியூக ரீதி​யாக மிக​வும் புத்​தி​சாலித்​தன​மானவர்.

தனது அணி​யில் உள்ள ஒவ்​வொரு வீரரின் பலத்​தை​யும் நன்கு அறிந்​திருக்​கிறார். அவர்​களிட​மிருந்து சிறந்த ஆட்​டத்தை எவ்​வாறு வெளிக்​கொண்டு வர வேண்​டும் என்​பதும் அவருக்​குத் தெரி​யும்.

டி 20 கிரிக்​கெட்​டில் எதிரணியை விட ஒன்று அல்​லது இரண்டு படிகள் முன்​னேறி சிந்​திக்க வேண்​டும். எதிரணி​யின் பலம், பலவீனங்​களை ஸ்ரேயஸ் ஐயர் மதிப்​பிடும் வித​மும், அதற்​கேற்ப அவர் தயா​ராகும் முறை​யும் மிக​வும் சிறப்​பாக உள்​ளது.

இதை பார்க்​கும்​போது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. இவ்​வாறு லட்​சுமண்​ கூறியுள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *