தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் வீழ்த்தப்பட்டு ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி – தினகரன் நம்பிக்கை!!

சென்னை:
‘தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் வீழ்த்தப்பட்டு ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும் என்ற வரிகளுக்கு ஏற்ப, இன்று தமிழகத்தைக் கவ்வியுள்ள இந்த மாய்மால சக்தி பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.

கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் தொழிற்சாலைகளால் கேள்விக்குறியாகியுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு,

தாராளமான தனியார்மயமாக்கல், கொத்துக் கொத்தாக நடைபெறும் படுகொலைகள், பாலியல் குற்றங்கள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் எனத் தமிழகத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ள இந்த இரவல் ஆட்சி விரைவில் ஜெயலலிதாவின் தொண்டர்களால் வீழ்த்தப்பட்டு தமிழகத்தின் பொற்காலமான ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்போவது உறுதி’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *