நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை – கார்த்திக் குமார்!!

பிரபல பாடகியான சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

கார்த்திக்குமார் பற்றி சுசித்ரா கூறும்போது, “கார்த்திக்குமார் நண்பர்களுடன் அடிக்கடி மும்பை சென்று விடுவார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு சந்தேகம் இருந்தது உள்பட பல கருத்துக்களை கூறி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன்.

அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *