ஜப்​பானில் நடை​பெற்ற 20-வது ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கங்​களை வென்ற விளை​யாட்டு வீரர்களுக்கு தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் சுப்​பா​ராவ் பாராட்டு!!

சென்னை:
ஜப்​பானில் நடை​பெற்ற 20-வது ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கங்​களை வென்ற விளை​யாட்டு வீரர்​களை தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் சுப்​பா​ராவ் பாராட்​டி​யுள்​ளார்.

தெற்கு ரயில்​வே​யின் பாலக்​காடு கோட்​டத்​தில் வணிக எழுத்​தராக பணி​யாற்​றும் தமிழகத்​தைச் சேர்ந்த செல்வி வித்யா ராம்​ராஜ், ஆசிய விளை​யாட்​டில் 3 வெவ்​வேறு பிரிவு​களில் பதக்​கங்​களை வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார்.

இது​போல, தெற்கு ரயில்​வே​யின் சென்னை தலை​மையக பணி​யாளர் பிரி​வில் மூத்த எழுத்​த​ராகப் பணி​யாற்​றும் மயி​லாடு​துறையைச் சேர்ந்த செல்வி பரணிகா இளங்​கோவன், மகளிர் போல் வால்ட் போட்​டி​யில் வெண்​கலப் பதக்​கம் வென்​றுள்​ளார். ஆசிய விளை​யாட்டு வரலாற்​றில் இந்த போட்​டிப் பிரி​வில் இந்​தியா பெறும் முதலா​வது பதக்​கம் இது​வாகும்.

திருச்​சி​ராப்​பள்ளி கோட்​டத்​தைச் சேர்ந்த விளை​யாட்டு வீரர் ஆர்​.​ராஜேஷ், ரிலே போட்​டி​யில் இந்​திய அணிக்கு வெண்​கலப் பதக்​கத்தை உறுதி செய்​தார்.

விளை​யாட்டு வீரர்​களின் இந்த சாதனையைப் பாராட்​டி, தெற்கு ரயில்வே பொது மேலா​ளர் சுப்​பா​ராவ், தெற்கு ரயில்வே விளை​யாட்டு சங்​கத்​தின் தலை​வர் கணேஷ் வாழ்த்​துகளை​ தெரி​வித்​துள்​ளனர்.

மேலும், இப்​போட்​டிகளில் பெருமை சேர்த்த இதர ரயில்வே ஊழியர்​களான தவ்​பீக் (திரு​வனந்​த​புரம்), செல்வி அநாமிகா (பாலக்​காடு), செல்வி டேவிட்

(சேலம் – ஈரோடு) ஆகியோ​ருக்​கும், அவர்​களது பயிற்​சி​யாளர்​கள், தொழில்​நுட்​பக் குழு​வினருக்​கும் தெற்கு ரயில்வே தனது மனமார்ந்​த வாழ்த்​துகளைத்​ தெரி​வித்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *