மருத்துவப் பணியாளர்களை கைது செய்தது அராஜகம் ; அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் !!

சென்னை:
‘பணிநிரந்தரம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக் கைகளை முன்னிறுத்தி போராட இருந்த பல்நோக்கு மருத்து வப் பணியாளர்கள் வீட்டுக்காவலில் அடைக் கப்பட்டிருக்கும் நிலையில், அதனை மீறி போராட வந்தவர்கள் வலுக்கட் டாயமாக கைது செய்திருப்பது கொடுங்கோல் ஆட்சி’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பணி நிரந்தரம், தற்செயல் விடுப்பு, பணி மாறுதல் கலந்தாய்வு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக போராட இருந்த பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு அனுமதி மறுத்து, அவர்களை ஆங்காங்கே வீட்டுக் காவலில் அடைத்து வைத்த தோடு, அதனை மீறி போராட வந்தவர்களை குண்டுக்கட்டாக கைது செய்திருக்கும் காவல் துறையின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.

ஜனநாயகம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான போராட்டத்தின் மூலமாக தங்களின் கோரிக் கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்ற பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை குற்றவாளி களை போல சித்தரித்து அவர்களை வீட்டுக் காவலில் வைத்தும், கைது செய்திருப்பதும் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், செவிலியர்கள், தூய் மைப் பணியாளர்கள், மின்சாரத் துறை பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் தங்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தவெக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என முதல்வர் விஜய் பெருமை பேசிக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.

போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டத்துக்கு தலைமை தாங்கும் பிரதிநிதிகளை வீட்டுக் காவலில் அடை ப்பது, காவல் துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவுவது என தவெக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்து மீறல்களும், அராஜகப் போக்குகளும் நாம் தமிழகத்தில் தான் வாழ்கிறோமோ அல்லது அடிமை நாட்டில் வாழ்கிறோமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவிப்பதோடு, கைது செய் யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப் பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முன்வர வேண்டும் என மருத்துவத் துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *